Wednesday, March 7, 2007

இந்தியர்களின் உரிமை

உலகக் கோப்பைக் கிரிகெட் போட்டி இன்னும் சில நாட்களில் மேற்க் கிந்தியத் தீவுகளில் துவங்கப்பட உள்ளது. இதில் இந்தியா உலகக் கோப்பை யைக் கைப்பற்றுமா? என்று இப்போதே பலரும் கருத்துத் தெரிவிக் கவும், சூதாட்டத்தில் ஈடுபடவும் ஆரம்பித்துள்ளனர். இதில் 20,000 கோடிக்கும் மேல் பந்தயம் கட்டப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் அங்கு நடைபெறும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் ஒளி பரப்பு செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக, உலக அரங்கில் நடைபெறும் முக்கியப் போட்டிகளான ஒலிம்பிக், காமன்வெல்த், உலகத் தடகளப் போட்டி, கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, தற்போது டென்னி° போன்ற விளையாட்டுகளில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம் பெறுமா? என்பதே இந்தியர்களின் கேள்வியாக உள்ளது. நூறுகோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் இது மிகவும் பரிதாபத் திற்குரியதே.கிரிக்கெட் மற்றும் டென்னி° போன்ற விளையாட்டுக்களில் இந்தியா தற்போது முன்னேறி வருகிறது என்றாலும், ஹாக்கி விளையாட்டின் பிறப்பிடமான இந்தியாவில் தற்போது ஹாக்கியில் இந்தியாவின் நிலை பற்றி விளையாட்டு ஆர்வலர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர் என்பதும் உண்மை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விளையாட்டுகளில் பங்கேற்கும் தன்மை குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் பல உள்ளன. குறிப்பாக, கல்வி முறையைக் கூறலாம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மெக்காலே கல்வி முறை வெறும் அலுவலர்களை மட்டுமே உருவாக்கக் கூடியதாக உள்ளது. மேலும், உலகமயமாக்கலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இக்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தை களை விளையாட்டுத் துறைக்கு அனுப்புவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம். கணினித்துறையில் கிடைக்கக் கூடிய பல்வேறு வேலை வாய்ப்புக்களும், ஐ.டி., கால்சென்டர், பி.பி.ஓ போன்றவற்றில் கிடைக்கும் சம்பளம் அவர்களை விளையாட்டுத் துறையை மறக்கச் செய்துள்ளது.
மேலும், முன்பு அரசுத்துறை நிறுவனங்களும் குறிப்பாக, ரயில்வே, வங்கி, காவல் துறை போன்றவற்றிலும், பல தனியார் நிறுவனங்களிலும் விளை யாட்டு வீரர்களுக்கென குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்து நிரந்தர வேலைவாய்ப்பு அளித்து, தங்களது நிறுவன ஊழியர்களாக்கி, தங்களது நிறுவனங்களின் சார்பாக பல்வேறு தேசிய, மாநில விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ள வைத்தனர். ஆனால், தற்போது விளையாட்டு வீரர்களை நிரந்தரமாக தேர்ந்தெடுப்பது என்பது முழுவதுமாக நின்றுவிட்டது என்றே கூறலாம். ஒரு சில நிறுவனங் கள் மட்டும் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டு வீரர்களைத் தங்களது நிறுவனங்களின் சார்பாகப் பங்கேற்க வைக்கின்றனர். அதற்காக ஒரு போட் டிக்கு இவ்வளவு தொகை என நிர்ணயிக்கின்றனர்.இவ்வாறு இந்தியா விளையாட்டுத் துறையில் பின்தங்கி இருந்தாலும், எல்லா விளையாட்டுக் களுக்கும் ரசிகர்களும், வெறியர்களும் உண்டு. குறிப்பாக, இந்தியா விளையா டும் போட்டியைக் காண இவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவல கங்களுக்கு விடுப்பு போட்டுவிட்டு இரவு, பகல் என்று பாராது போட்டிகளைக் காண்போ ரும் உண்டு. இந்தியாவில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால், போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்து இரண்டு மணி நேரத்திற்குள் எல்லா டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்து விடுகிறது. இதிலிருந்தே இந்தியாவில் கிரிக்கெட் டின் முக்கியத்துவத்தை அறியலாம். அதே போன்று, உலகக் கோப்பைக் கால்பந்து நடைபெறும் காலங்களில், இந்தியா விளையாட லில்லை என்றா லும் கூட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிப் பெட்டி அல்லது கடற்கரையில் மெகா °கீரின் முன் அமர்ந்து விடிய விடிய போட்டியைப் பார்ப்பவர்களும் உண்டு.
தேசியக் கால்பந்துப்போட்டிகள் வருடா வருடம் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், கொல்கத்தா, கேரளா, கோவா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மட்டுமே கால்பந்து ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை நேரு விளையாட்டரங்கம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு சரியாகப் போட்டிகள் நடத்தப்படுவதில்லை என கால்பந்து ஆர்வலர்கள் குறை கூறு கின்றனர். கால்பந்து விளையாட்டிற்காகக் கட்டப்பட்ட அரங்கில் பள்ளி, கல்லூரிகளின் ஆண்டு விழாக்களுக்கும், அரசு நிகழ்ச்சிகளுக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிப்பதாகத் தோன்றுகிறது. மேலும், சென்னை மாவட்ட சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் போட்டிகள் சரியான காலத்தில் நடத்தப்படுவதில்லை என்பதும், ஒரு வருடத்தில் நடத்தப்பட வேண்டிய போட்டிகள் சரியான காலத்தில் முடிக்கப்படாமல் அடுத்த ஆண்டிலும் நடத்தப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் மற்ற கிரிக்கெட் வாரியங்களைவிட அதிக சொத்து மதிப்பைக் கொண்டதாக உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத் திற்கு நடைபெறும் தேர்தல்களின் போது அதற்கு போட்டியிடுபவர்கள் செய்யும் செலவுகளைக் கவனித்தாலே இந்திய கிரிக்கெட் வாரியம் எவ்வளவு பெரிய சொத்துக்குச் சொந்தமானது என்பதை அறிய முடியும். இந்தியாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை அல்லது இந்தியா பங்கு பெறும் போட்டிகளைக் கூட நாம் பார்க்க முடியாமல், பல நிறுவனங்கள் கோடிக் கணக்கான ரூபாயை இந்திய கிரிக் கெட் வாரியத்திற்குச் செலுத்தி அப்போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுவிடுகின்றன. அப்போட்டி களின் போது ஒளிபரப்பப்படும் விளம்பரங் களின் மூலம் அந்நிறுவனங்கள் செலுத்திய தொகையை விட பல மடங்கு லாபம் அடைகின்றன. அவ்வாறு அந்நிறுவனங்கள் பெரும் ஒளிபரப்பு உரி மையை வைத்துக் கொண்டு கேபிள் மூலமோ அல்லது அதற்கென தனி வசதிகள் இருந்தால் மட்டுமே அப் போட்டிகளை நாம் பார்க்கமுடியும். இவ்வாறு இருந்தால் எப்படி விளையாட் டுத்துறை வளர்ச்சி பெறும்?
கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு, “விளையாட்டு ஒளிபரப்பு சிக்னல் அவசரச்சட்டம் 2007” என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தியா வில் நடைபெறும் போட்டிகளை முழுமையாகவும், இந்தியா வெளிநாடுகளில் பங்கேற்கும் போட்டிகளை சிறப்புக்காட்சியாகவும் வெளியிட இச்சட்டம் வழிவகைசெய்துள்ளது. நாள் முழுவதும டி.வி. ஷோ ரூம்கள் முன்பும், வணிக வளாகங்களின் முன்பும் கால்கடுக்க நின்று விளையாட்டைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இச்சட்டத்தின் மூலம் விடுதலை கிடைக்கும் என்பது உறுதி. இச்சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே ஒளிபரப்பு உரிமம் வாங்கியுள்ள தனியார் நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இச்சட்டத்தினால் அவர்கள் பாதிப் படைவார்கள் என்பது உண்மை. இருந்தாலும், அதில் அந்நிறுவனங்களின் லாபம் ஒன்றே குறிக்கோளாய் இருக்கும். ஆனால், விளையாட்டு என்பது ரசிகர்களின் உணர்வுப் பூர்வமான ஒரு விஷயம் ஆகும். இந்தியாவில் விளை யாட்டு மோகத்தை அதிகரிக்கும் என்பதும் உண்மை. மேலும், விளையாட்டுப் போட்டிகளை தூர்தர்ஷனில் ஒளிபரப்பினால், விளம்பரங்களால் கிடைக்கும் பணம் தூர்தர்ஷனை மேலும் நவீனமயமாக்க அல்லது அதன் வளர்ச்சிக்கு உதவும். அதன் வருமானமும் பெருகும். மத்திய அரசு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும், விளையாட்டு ஒளிபரப்பு சிக்னல் அவசரச் சட்டத்தைக் கண்டிப் பாக அமல்படுத்த வேண்டும். விளையாட்டைக் காண்பது ஒரு சில நிறுவனங் களின் கைகளில் அல்லாமல் அது கோடி இந்தியர்களின் உரிமையாக ஆக்கப்பட வேண்டும்.
இந்தியாவில், இந்திய அணியினரின் விளையாட்டை இந்தியர்கள் பார்க்க உரிமையில்லை என்றால், வேறு யார் தான் பார்க்க உரிமை படைத்தவர்கள்?

2 comments:

சந்திப்பு said...

முற்றம் தங்களது கட்டுரை மிகச் சிறப்பானது. எதிர்கால இளைஞர்கள் பற்றிய கவலையையும், விளையாட்டுத் துறையின் இன்றைய போக்கையும், ஹாக்கி உட்பட முக்கிய விளையாட்டுக்களில் இந்தியா எவ்வாறு பின்தங்கியுள்ளது என்பதை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

முற்றம் said...

சந்திப்பிற்கு
தங்களின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி, தொடர்ந்து இத்தளத்திற்கு ஆலோசனை வழங்குங்கள். அதனால் இவ்வளைத்தளம் சிறக்க உதவுங்கள்.